
அண்ணாத்த படத்திற்கு பிறகு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த தகவல் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படையப்பா படத்தில் ரஜினியோடு நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில், சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியோடு கைகோர்க்கவிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments





