Spotlightசினிமா

கையில் வேல்.. பின்னணியில் ஐயப்பன்! வைபவ்வின் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார்.

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ‘மாளிகப்புரம்’ பட இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில், வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக ‘தத் த்வம் அஸி’ எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது ‘மணிகண்டா’ எனத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி வைபவ் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பின்னணியில் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு, உணர்ச்சிகரமான தருணங்களும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்த திரைப்படமாக ‘மணிகண்டா’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் வைபவ்வுடன் மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, அர்ஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைக்க, யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் காலகட்டத்தில் ‘மணிகண்டா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button