
என்னமோ நடக்குது, அச்சமின்றி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்..
அடுத்த மாதம் சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவுள்ளது.
Facebook Comments