
அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள படம் ’விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.
தற்போது இதன் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் வியாபாரமும் தொடங்கி தமிழக விநியோக உரிமையை கேஜேஆர் ஸ்டுடியோ கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து அஜித் படம் என்பதால் தொலைக்காட்சி உரிமை யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவியது. சன் தொலைக்காட்சி பெரும் விலை கொடுத்து இப்படத்தை கைப்பற்றியுள்ளது.
இதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ‘பேட்ட’ படத்தையும் தயாரித்துள்ளது.
Facebook Comments





