
இயக்கம்: கருணாநிதி
நடிகர்கள்: கிஷோர், டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா, நரேன், திலீபன் ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்கம் புலி
இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி
ஒளிப்பதிவு: எஸ் பிச்சுமணி
தயாரிப்பு: ஜி ஆர் மதன் கிருஷ்ணன்
வாடகை கார் ஓட்டி தனது குடும்பத்தைப் பார்த்து வருகிறார் கிஷோர். இந்நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை வர, கடன் வாங்கி சொந்தமாக கார் வாங்கி அதனை டேக்ஸியாக பயன்படுத்து தனது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்.
டூவிலரில் வரும் நபர் ஒருவர் கிஷோர் மீது மோதிவிட, கிஷோரின் காலில் அடிபட்டு விடுகிறது. இந்த சூழலில், வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக, அந்த வழக்கில் கிஷோர் மீது வழக்கு போட்டு அவரை ஜெயிலில் பிடித்து போடுகிறது காவல்துறை.
அவர் மீது கொலைபழி ஒன்றை செலுத்தி, தண்டனைப் பெற்றுத் தர மேலிடத்திலிருந்து ப்ரஷ்ஷர் வர, அடுத்தடுத்து கதை சுவாரஸ்யம் எடுக்கிறது. இந்த சூழலில், தான் காதலிக்கும் பெண்ணின் அண்ணன் தான் கிஷோர் என்றறிந்து, அவருக்கு உதவி செய்ய களத்தில் இறங்குகிறார் டிடிஎஃப் வாசன்.
இறுதியில் கிஷோரை இந்த வழக்கில் இருந்து டிடிஎஃப் வாசன் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கிஷோர் தனது அனுபவ நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார். படத்தின் மெயின் முக்கிய கதாபாத்திரத்தை தாங்கி நிற்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கும் காட்சியில் ஒரு நிமிடம் விசாரணை படத்தின் காட்சிகள் வந்து செல்ல வைத்துவிட்டார்.
காட்சிகளில் ஓகேவாக இருந்தாலும், கதாபாத்திரத்தை மீறி ஓவர் ஆக்டிங் நிறையவே எட்டிப் பார்த்தது டி டி எஃப் வாசனிடம். பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால் நூறு ரூபாய்க்கு நடிப்பார்கள் என்று சொல்வார்களே அதே போல் தான் வாசனின் நடிப்பும் இருந்தது.
ஹரீஷ் பெராடி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். எல்லா படத்திலேயும் ஒரே மாதிரியான பாடி லாங்குவேஜ், குரல் என ஃபோர் அடித்துவிட்டது ஜான் விஜய்யின் ஆக்டிங். அதிலும் இந்த படத்தில் இர்ரிட்டேட்டிங் ஆக்டிங்கை கொடுத்து கடுப்படைய வைத்துவிட்டார். கொஞ்சமாவது நடிப்பை மாத்துங்க ஜான் விஜய் சார். வில்லத்தனம் பண்ணுவது வேறு, இர்ரிட்டேட் பண்ணுவது வேறு…
முன்னாள், இந்நாள் காவல்துறையின் சிறைக்குள் நடக்கும் படுகொலை சம்பவத்தைமையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். படம் எடுக்கலாம் அதற்காக இம்மாதிரியான சித்ரவதை காட்சிகளை நன்றாகவே குறைத்திருக்கலாம். இவ்வளவு சித்ரவதைகள் படத்தில் தேவையில்லாத ஒன்று தான்.
மற்ற நடிகர்களிடம் நடிப்பை அளவாக வாங்கியிருக்கிறார் இயக்குனர். பின்னணி இசை படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.





