Spotlightசினிமா

‘கணம்’ பட இயக்குநருடன் கைகோர்த்த ருக்மிணி வசந்த்! புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ருக்மிணி வசந்த், தற்போது ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் ருக்மிணி வசந்துடன் தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தில் ருக்மிணி வசந்த் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் படக்குழு வித்தியாசமான அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

தாய் – மகன் பாசத்தையும் காலப்பயணத்தையும் மையமாகக் கொண்டு உருவான ‘கணம்’ படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற ஸ்ரீ கார்த்திக், தனது அடுத்த படத்தில் ருக்மிணி வசந்துடன் முதன்முறையாக இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Copy All Tags

Facebook Comments

Related Articles

Back to top button