
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ வரும் தீபாவளி கொண்டாட்டமாக வரும் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிறுத்தை ‘சிவா’ விரைவில் தளபதி விஜய்யின் படத்தை நான் இயக்குவேன் என்று விருது வழங்கும் விழாவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கியிருக்கிறார் அஜித்.
தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இவர், படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய் தனது தளபதி 64, படத்தை முடித்து ‘தளபதி 65’ படத்தை சிவாவிற்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments