Spotlightசினிமா

70 லட்சம் பார்வையாளர்களை தொட்ட ’புது மெட்ரோ ரெயிலு’ பாடல்!

ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.

இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது,‘ ராக் ஸ்டார் டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

‘சாமிஸ்கொயர் ’முதலில் வெளியான ‘அதிரூபனே…’ என்ற மெலோடி பாடலுக்கும். அதைத் தொடர்ந்து வெளியான ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.

புது மெட்ரோ ரெயிலு பாடல் யூடியுப்பில் சுமார் 70 லட்சம் பார்வையாளர்களை தொட்டுள்ளது.

அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’ என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.’ என்றார்.

ரசிகர்களும், திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள்.
இதனிடையே ஆகஸ்ட் =2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான பயிற்சி மற்றும் ஒத்திகையில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் தேவி ஸ்ரீபிரசாத்திடம்,‘ இந்த ஆண்டு நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சியில் புதிதாக என்ன செய்யவிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,‘ அதை இப்போதே சொல்லமாட்டேன். தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் இதில் இடம்பெறும். ஏனைய விசயங்கள் சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்.’ என்றார்.

ராக் ஸ்டார் டி எஸ் பியின் திரைப்பட பாடல்களில் இருக்கும் மியூசிக்கலி எமோஷன் அவருடைய ஸ்டேஜ் ஷோவிலும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button