Spotlightவிமர்சனங்கள்

சகா விமர்சனம் 2.75/5

சரண், பாண்டி இருவரும் இணைபிரியா நண்பர்கள். இவர்களுக்கு நட்பு என்ற உறவைத் தவிர வேறு யாரும் இல்லை.

இவர்கள் இவருவரையும் வளர்த்த அம்மாவை கொன்றவர்களை இவர்கள் கொல்கிறார்கள். இதற்காக சிறைத் தண்டனை அனுபவிக்கின்றனர்.,

சிறையில், பெண்களைக் கடத்தி விற்கும் பிருத்விராஜ் உடன் மோதுகிறார்கள்.

இதனால் பாண்டியை சிறைக்குள்ளேயே கொன்று விடுகிறார் பிருத்வி. சில நாட்களில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி சென்றுவிடுகிறார் பிருத்வி.

தன் நண்பனைக் கொன்றவனை சிறையிலிருந்து தப்பித்து கொல்ல வேண்டும் எனத் துடிக்கிறார் சரண். அவனுக்கு மற்றொரு சிறை நண்பன் கிஷோர் உதவுகிறார்.

மற்றொருவர் காதலியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.

அவர்கள் நினைத்ததை செய்து முடித்தார்களா? தப்பித்ததன் நோக்கம் நிறைவேறியதா? போலீஸ் என்ன செய்தனர்? கண்டு பிடித்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை ஆகும்.

சத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வடசென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்தவர்தான் சரண்.

‘பசங்க’ படத்தில் நம்மை கவர்ந்த கிஷோர், ஸ்ரீராம். இதில் கிஷோர் அப்பாவி, ஸ்ரீராம் கோபக்காரன். பிருத்விதான் படத்தின் வில்லன்.

ஆய்ரா மற்றும் நீரஜா என இரண்டு அழகான நாயகிகள் உள்ளனர். இவரும் நல்ல தேர்வு. இருவருக்கும் ஓரிரு டயலாக்குகளே உள்ளன.

வழக்கம் போல சிறை வார்டனாக தீனா. உருட்டி மிரட்டுகிறார். சின்ன பசங்களிடம் அடிக்கடி அடியும் வாங்குகிறார்.

ஷபீரின் இசையில் பின்னணி இசை ஓகே. யாயும் யாயும் பாடல் ஒன்றே போதும் இவரது இசையை நிரூபிக்க.

நிரன்சந்தர் ஒளிப்பதிவு அழகு..

சகா – நட்பும், காதலும்

Facebook Comments

Related Articles

Back to top button