Spotlightசினிமா

2 கோடி மக்களை கவர்ந்த ’சகா’ பாடல்!

முருகேஷ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ளது ‘சகா’. வட சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்த சரண் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் அநேக திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘யாயும்….’ எனத் துவங்கும் பாடலை இதுவரை சுமார் 2.4 கோடி பேர் யூடியூப் பக்கத்தில் கண்டு ரசித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இப்பாடல் மிகவும் வைரலாகவும், இளைஞர்களின் அபிமான பாடலாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

Related Articles

Back to top button