Spotlightதமிழ்நாடு

FEFDY பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் VKAN – V Solution… கல்வித்துறையில் ஒரு புது முயற்சி!

VKAN – V Solution private Limited வரும் 27 ஆம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் மழலியர் பிரிவிற்கான FEFDY பாடத்திட்டம் வெளியிட உள்ளது.

இந்த FEFDY பாடத்திட்டம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

உலகத்தரம் வாய்ந்த கற்றல் கற்பித்தல் இரண்டிலும் மேம்பட்ட ஒரு பாடத்திட்டத்தையும் கற்றல் துணைக்கருவிகளையும் FEFDY பாடத்திட்டமாக VIKAN-V உருவாக்கியுள்ளது.

இந்த FEFDY பாடத்திட்டம் மூன்று முதல் பத்து வயது வரையிலான மாணவர்களுக்கானது.

இந்த FEFDY பாடத்திட்டம் தொழில்நுட்ப அடிப்படையிலான இயங்கலை மற்றும் இயல்பான நிலைக் கற்பித்தல் – கற்றல் நடைமுறைகளைக் கொண்ட பள்ளிகளை மிகவும் திறம்பட செயல்படவும் மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தவும் உதவும் ஒரு கல்வியியல் தொழில்நுட்ப தீர்வாகும்.

27ஆம் தேதி அன்று நடைபெறும் விழாவில் மதிப்பிற்குரிய கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேலும், பல சிறப்பு வாய்ந்த விஐபி’களும் இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button