Spotlightவிமர்சனங்கள்

டகால்டி விமர்சனம்

னது கனவில் தோன்றிய பெண்ணை வண்ணமாக தீட்டி அந்த பெண்ணை அனுபவிப்பவர் கோடீஸ்வரராக (வில்லன்) வரும் தருண் அரோரா.

அப்படியாக, ஒரு நாள் தனது கனவில்  வரும் பெண்ணை வண்ணமாக தீட்டுகிறார் தருண். அது நாயகி ரித்திகா சென் உருவமாக வந்து நிற்கிறது.

ரித்திகாவை கொண்டு வருபவருக்கு 10 கோடி என்று இந்தியாவில் இருக்கும் எல்லா டான்’களுக்கும் தகவல் அனுப்புகிறார்.

மும்பையில் கஞ்சா கடத்தும் தொழில் செய்து வரும் ராதாரவிக்கும் இந்த தகவல் வருகிறது. ராதாரவிக்கு கீழ் அதே கஞ்சா கடத்தல் வேலை புரியும் சந்தானம். ”இந்த பெண் எனக்கு தெரியும், ஒரு வார காலத்திற்குள் நான் அழைத்து வருகிறேன்” என்று கூறி அந்த பெண்ணை தேடும் வேலையில் இறங்குகிறார்.

திருச்செந்தூரில் இருப்பதை அறிந்து, நாயகி ரித்திகாவை ஆசை வார்த்தை கூறி மும்பை அழைத்து வருகிறார் நாயகன் சந்தானம்.

அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

தில்லுக்கு துட்டு 2, ஏ 1 படத்தில் பார்த்த சந்தானம் இப்படத்தில் மிஸ்ஸிங். அதிக இடங்களில் சந்தானத்திற்கான ஹீரோயிசத்தை எதிர்பாத்து, கதைக்கான ஓட்டத்தை தவறவிட்டுள்ளனர். இரண்டாம் பாதியில் அவ்வப்போது யோகிபாபுவுடன் சந்தான அடித்த லூட்டிகள் சற்று ஆறுதல்.

நாயகி, ரித்திகா சென் கதாபாத்திரத்திற்கு மீறிய ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். 5 ரூபாய்க்கு நடித்தால் போதுமே எதற்கு 5000 ரூபாய்க்கு நடிக்க வேண்டும் என்று தான் நாயகியை பார்த்து கேட்க தோன்றுகிறது.

நமக்கு இருந்த ஒரே ஆறுதல், யோகிபாபுவின் காமெடி மட்டுமே. அதுவும் கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே.

மற்றபடி, பிரம்மானந்தம், சந்தானபாரதி, நமோ நாராயணா , ரேகா என அனைவரும் கதைக்கு வந்து செல்லும் கதாபாத்திரம் தான்.

கேட்டு, பார்த்து அலுத்துப் போன கதையாக தான் ‘டகால்டி’ கதையை பார்க்க முடிகிறது. அதனாலேயே முடியலடா சாமி என்று தலையில் கைவைத்து கொண்டவர்கள் ஏராளம். விஜய நாராயணின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான், பின்னனி இசையும் அதேபோல் தான்.

தீபக்குமார் பாரதியின் ஒளிப்பதிவு கலர்புல்.

ஸ்டண்ட் சில்வாவின் ஆக்‌ஷன் அதிரடி தான்.

டகால்டி – யோகி பாபு & சந்தானம் காமெடி சரவெடிகள் (மட்டும்) அல்டி…

Dagaalty – 3/5

Facebook Comments

Related Articles

Back to top button