Spotlightசினிமா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வசூல் வேட்டையாடும் “சபாபதி”!!

றிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “சபாபதி”.

முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியும் குறை ஒரு குறை இல்லை என்ற மூலக்கருத்தை மையப்படுத்தியும் வெளியான இப்படம் பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

திரையரங்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சந்தானம் மற்றும் எம் எஸ் பாஸ்கரின் கூட்டணி படத்திற்கு பெரும் பலமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

சிம்புவின் “மாநாடு” வரும் 25 ஆம் தேதி வெளியாகும் வரை சபாபதியின் வசூல் வேட்டை தொடரதான் செய்யும் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close