Spotlightசினிமா

மீண்டும் ட்ரெண்டுக்கு தயாரான சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!

ரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு திடீரென ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார்.

இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அண்ணாச்சி.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்னர் பரபரப்பாக நடந்தது.. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. பின்னர் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளது படக்குழு. பொள்ளாச்சியில் தற்போது அண்ணாச்சி பங்கேற்கும் டூயட் பாடல்களைப் படமாக்கி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button