Spotlightசினிமா

கமர்ஷியல் ஹிட் அடிக்க தயாராகும் “பட்டத்து அரசன்”!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டத்து அரசன்”.

இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ், ஆர் கே சுரேஷ், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணமே இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

குடும்ப ரசிகர்களை கவரும் விதமாகவும் மண் மனம் மாறாமலும் படத்தை இயக்குவதில் வல்லவர் தான் இயக்குனர் சற்குணம்.

தான் இயக்கிய மூன்று படங்களிலும் கதாபாத்திரங்களின் தேர்வாக இருக்கட்டும், ரசிகர்களை கவரும் விதத்தில் கதை கொடுப்பதிலும் இருக்கட்டும் தனி முத்திரை ஒன்றை பதித்துவிட்டுச் செல்லக்கூடியவர் இயக்குனர் சற்குணம்.

படத்து அரசன் படத்திலும் குடும்ப உறவுகளின் மேன்மையையும் பாரம்பரிய விளையாட்டான கபாடி போட்டியின் பெருமையையும் கையில் எடுத்து அதை திறம்பட படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர்.

இப்படம் அதர்வாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கிறார்கள்.

நாளை (25/11/2022) உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வெளிவர இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button