Spotlightசினிமா

டிசம்பர் 28ல் வெளிவருகிறது ‘சர்வம் தாளமயம்’!

ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சர்வம் தாளமயம்’. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது காத்திருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

படத்தின் அனைத்து பணிகளையும் முடித்திருக்கும் படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி டிசம்பர் 28-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜீவ் மேனன், இதற்கு முன்னதாக மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker