Spotlightசினிமா

நீதிக்கான போராட்டம் மீண்டும் ஆரம்பம்! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு!

தமிழ் ZEE5 தளத்தில் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சட்டமும் நீதியும் 2’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் அக்டோபர் 23ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில், நடிகர் சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடித்துள்ளார். அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். 18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார்.

அதிகாரம், செல்வாக்கு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் நீதிக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு புதிய வழக்குடன் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. நீதிமன்றப் பின்னணியில் விறுவிறுப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்தத் தொடரின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் சீசனைவிட அதிக சவால்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த ‘சட்டமும் நீதியும் 2’ தொடர் அக்டோபர் 23 முதல் தமிழ் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

டிரெய்லர்: https://youtu.be/P3J4Dq3rcpw 

Facebook Comments

Related Articles

Back to top button