Spotlightசினிமா

ஜெய் நடிக்கும் புதிய ஹாரர் காமெடி படம்! தென்காசியில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய ஹாரர் காமெடி திரைப்படமான ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஏ. எம். பிரபாகரன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் IAS சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும், ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

ஹாரர் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button