
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘சூரி 7’ படத்தின் பூஜை அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களை இயக்கிய ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், நலன் குமாரசாமி, ராம்குமார், ஏ.ஆர்.கே. சரவணன், மதிமாறன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
‘விடுதலை’, ‘கருடன்’, ‘மாமன்’, ‘மண்டாடி’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இதுவாகும்.
சூரி – ரவிக்குமார் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.





