Spotlightவிமர்சனங்கள்

சீமராஜா – விமர்சனம் 3/5

சிவகார்த்திகேயன் – சூரி – பொன்ராம் – இமான் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணிதான் இந்த ‘சீமராஜா’.

கதை: ராஜா வம்சத்தில் பிறந்தவரான சிவகார்த்திகேயன்,, ஊருக்குள் ராஜாவுக்கான மரியாதையோடு வாழ்ந்து வருகிறார். அவருடைய அப்பாவான நெப்போலியனுக்கும் அதே ராஜா மரியாதை தான்.

இந்நிலையில் டீச்சராக இருக்கும் சமந்தா மீது காதல் கொள்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் ஊரான சிங்கம்பட்டிக்கும் சமந்தாவின் ஊரான புளியம்பட்டிக்கும் பொதுவான காய்கறி சந்தை பல வருடங்களாக மூடிக் கிடக்கிறது.

மார்க்கெட்டை அடைய புளியம்பட்டியைச் சேர்ந்த வில்லன் லால் மற்றும் அவரது இரண்டாவது மனைவியாக வரும் சிம்ரனோடு மோதுகிறார். மார்க்கெட்டை அடைந்ததற்கு பிறகு தான் தெரியவருகிறது சமந்தா வில்லனாக வரும் லாலின் முதல் மனைவியின் மகள் என்று.

பிறகு என்ன வழக்கம்போல்தான்.. காதலன் காதலியை கரம் பிடித்தாரா..?? ஊர் மக்கள் நிலத்தை அடித்து பிடுங்க நினைக்கும் வில்லனின் செயல் எடுபட்டதா..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

விமர்சனம்: படத்திற்கு படம் சிவகார்த்திகேயனின் நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் முன்னேற்றம்தான். அவரது உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெளிவாக தெரிகிறது. அதிலும், சூரியோடு அவர் அடிக்கும் லூட்டிகள் திரையரங்குகளில் சிரிப்பலை கோலாகலம் தான். சமந்தாவுடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார்.

குறிப்பாக கடம்பவேல் ராஜாவாக வரும் ப்ளாஷ் பேக் காட்சிகளில் கைதட்ட வைக்கின்றன. ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சில படங்களே நடித்தாலும், மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சூரியின் காமெடி அப்ளாஷ். சமந்தா ஏதோ பட்டும் படாமலும் நடித்த ஒரு ஃபீலிங். நெப்போலியன் கதைக்கு வந்து செல்லும் பாத்திரம்தான். சிம்ரனை எதற்காக வில்லியாக எடுத்தார்கள் என்று புரியவில்லை. வில்லன், வில்லியின் கதாபாத்திரங்கள் கதைக்கு என்னமோ அவ்வளவாக ஒட்டவில்லை.

கதை, முதல் பாதி செமயாக சென்று கொண்டிருக்கும் போது, இரண்டாம் பாதியில் சற்று சோதனை செய்து விட்டது. கடம்பவேல் ராஜா கதை அருமை. ஒரு தமிழ் மன்னனின் வரலாறு சிறிது நேரத்தில் புரியம்படியாக காட்சியோடு கொடுத்திருப்பது சபாஷ்.

இமானின் இசையில் பாடல்கள் ரகம், பின்னனி இசை வழக்கம்போல் தான் ரிப்பீட் மோட்.

ஒளிப்பதிவு – கலர்புல்

கலை – வொண்டர்புல்

சீமராஜா – வசூல் ராஜா தான் …

Facebook Comments

Related Articles

Back to top button