பெரம்பலூரில் சத்யா என்ற பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்திய முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை திமுகவில் இருந்து நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
பெரம்பலூரில் அழகு நிலையம் வைத்திருக்கும் சத்யா என்ற பெண்ணை திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ 20 லட்சத்தை திரும்ப தராததால் சத்யாவை தாக்கியதாக செல்வகுமார் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கிய செல்வகுமாருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சத்யாவை தாக்கிய முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செய்லாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் வரும் வகையில் செயல்பட்டதால் அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என கூறியிருக்கிறார்.