
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். தமிழ் அரசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஹெட் ஆப் ஆப்ரேஷன்ஸ் ஆக ஶ்ரீநாத் விஸ்வநாதன் பணியாற்றுகிறார். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகவும், மோனிக் போஸ்டர் வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சில அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், செங்குலம் திரைப்படமாவது கைகொடுத்து தமிழ் சினிமாவில் அவருக்கான அடையாளத்தைப் பெற்றுத் தருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…





