Spotlightசினிமா

ஒரே இரவில் நடக்கும் கிரைம் திரில்லர்! அஜய் கார்த்தி – தீபா பாலு நடிக்கும் ‘ஸ்டேஷன்’!

அஜய் கார்த்தி மற்றும் தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘STATION – Hunt For Survival’. காதல், குற்றம், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ படங்களில் நடித்த அஜய் கார்த்திக்கு ஜோடியாக, ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடர் புகழ் தீபா பாலு நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை KP Infotainment சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார்.

ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட இப்படத்தில், சுமார் 70 சதவீதக் காட்சிகள் காவல் நிலையத்திலேயே நடைபெறுகின்றன. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இயக்குநர் ஏ. வெங்கடேஷ், தினேஷ் பிரபாகர், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சுபாஸ் பாரதி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார். பிரபு ஜாக்கி சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

காதல், குற்றம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகும் ‘ஸ்டேஷன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button