Spotlightசினிமா

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” !!

இயக்கம்: சிவகுமார் முருகேசன்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: கமல்ஹாசன் – ஆர். மகேந்திரன்

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”.

துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது.

நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக “சேயோன்” அமையும்.

அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து புதிய உயரங்களை எட்டும் என்பதில் ஐயமில்லை.

கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் சேயோன், வலிமையான கதைக்களத்தையும் ஈர்க்கக்கூடிய திரைக்காட்சிகளையும் ஒன்றிணைக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் முருகேசனின் இரண்டாவது படம் இது.

முதன்முறையாக ராஜ்கமலுடனும், சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது இத்திரைப்படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் டர்மரிக் மீடியாவின் நவீனத்துவப் பாய்ச்சல் ஆகியவற்றுடன் உருவாகும் “சேயோன்” 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும்.

இப்படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியாகும் தேதி குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Facebook Comments

Related Articles

Back to top button