
தயாரிப்பிலும் நடிப்பிலும் பயங்கர பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால்.
தற்போது, அவர் சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சஸன், ஜெகஜால கில்லாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து விஷ்ணு விஷால், அடுத்து புதியவர் வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
அவரது ஜோடியாக டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி நடிக்கிறார். மற்றும் பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பிரவீன், நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்கின்றனர்.
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படத்தில் ஹீரோவாக நடித்தவரும், பாடகருமான கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தினையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கவிருக்கிறார்.
Facebook Comments