மனிதன் போதும் என்ற ஒன்றை கூறுவாயின் அது உணவு என்ற ஒன்றுக்கு மட்டுமே இருக்க முடியும்.
தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்.
என உண்ணும் உணவிற்கும் அதை அருந்தும் உயிர்களுக்கும் கவிதைகளை கட்டுக்கட்டாக அடுக்க முடியும்.
முத்துக்கும் உப்புக்கும் பெயர் போன தூத்துக்குடியில் அறுசுவை உணவை அளிப்பதற்காக ”TN 69 அஞ்சறைப் பெட்டி’ என்ற உணவகம் ஒன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
69 ரூபாயில் பிரியாணியும்( கூடவே சில்லி சிக்கன், சிக்கன் 65, முட்டை),
130 ரூபாயில் 18 வகையான மதிய உணவு வகைகளும்,
40 ரூபாயில் மினி டிபன் வகைகளும்,
69 ரூபாயில் மாலையில் ப்ரைட் ரைஸ் வகைகளும் அளிக்கப்படுகின்றன.
குறைந்த பணத்தில் நிறைவான சாப்பாடு கொடுக்கப்படுவதால் இவ்வுணவகம் அப்பகுதி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யும் வசதி….. இவ்வுணவகத்தின் மேலும் ஒரு சிறப்பு.
தூத்துக்குடிக்கு விஜயம் செய்யும் மக்கள் இந்த ‘அஞ்சறைப் பெட்டி’க்குள் ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்.
– சண்முகநாதன்