Spotlightவிமர்சனங்கள்

ஷூ – விமர்சனம் 2/5

திலீபன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா ம்ற்றும் ப்ரியா கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ஷூ”. இப்படத்தை கல்யாண் இயக்கியிருக்கிறார்.

கதைப்படி,

நாயகன் திலீபன் ஒரு டைம் ட்ராவலர் மிஷின் பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அச்சமயத்தில், கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண்டுபிடித்த ஷூ’வை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டுச் செல்கிறார் திலீபன்.

மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் மகளாக வரும் ப்ரியாவிடம் சிக்குகிறது. அங்கிருந்து, யோகிபாபுவின் கைக்கு செல்கிறது அந்த ஷூ.

ஷூ வந்த நேரம், யோகிபாபுவின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

அதேவேளையில், 15 வயது வரை மதிக்கத்தக்க சிறுமிகளை கடத்தி அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வரும் ஒரு கும்பலிடம் அந்தோணி தாசன் தனது மகள் ப்ரியாவையும் விற்று விடுகிறார் சிக்கி.

ப்ரியாவின் வாழ்க்கை என்னவானது.? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா.? டைம் ட்ராவலர் ஷூ என்னவானது.? என்பதே மீதிக் கதை.

சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ள ஒரு கொடூரமான காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் என்று தான் குழந்தைகளை பாலியல் தொழில் காட்சிகளுக்கு ஒரு முடிவு கட்டுவார்களோ.?

குழந்தைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகளை குறைத்து பாலியல் கொடுமைகளைக்கு எதிரான விழிப்புணர்வை கொடுக்கும் படமாக கொடுத்து சினிமா மூலம் சிறு விழிப்புணர்வு முயற்சி எடுக்கலாம்.

அதை தவிர்த்து, கொடுமைக் காட்சிகளை எடுத்து அதையும் காட்சிப்படுத்தி நம்மையும் பார்க்க வைத்து கொடுமை செய்ய வைக்கிறார்கள்.

யோகிபாபு மற்றும் திலீபனின் காட்சிகள் பெரிதாகவும் இல்லை.. படத்தின் பெரிதான பில்லராக தனது நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் சிறுமியாக வந்திருந்த ப்ரியா. இவர் இயக்குனர் இயக்குனர் கல்யாண் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமான வசன உச்சரிப்பு, அழகான முக பாவனை கொடுத்து படத்தின் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்… தந்தையே மகளை பணத்திற்காக பாலியல் தொழிலுக்கு தள்ளுவது..?? இக்காட்சிகளையெல்லாம் தமிழ் இயக்குனர்கள் கொஞ்சம் தவிர்க்கலாமே..!

கிங்க்ஸ்லி மற்றும் KPY பாலா இருவரின் காமெடி காட்சிகளும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

ரவுடிகளின் கையில் சிக்காமல் ப்ரியா ஓடி ஒளியும் காட்சி, காட்டிற்குள் சிறுமிகள் ஓடி ஒளியும் காட்சிகளின் நீளத்தை அதிகமாகவே குறைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஓகே ரகமே..

ஷூ – ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் முடியல..,

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close