
பிகில் படத்திற்கு பிறகு ”மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பு தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புக்குச் செல்லும் விஜய், அங்குள்ள தனது ரசிகர்களை வரவழைத்து கூட்டம் கூட வைத்து விளம்பரம் தேடிக் கொள்கிறாராம்.
அது மட்டுமல்லாமல், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வைத்து எப்போதும் நாம் பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி வருகிறாராம் விஜய்.
சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே தனி ஒரு குழு வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவரை விட உட்ச நடத்திரங்கள் எல்லாம் சத்தமில்லாமல் தனது படபிடிப்பை முடித்துக் கொண்டு வரும்போது, இவருக்கு ஏன் இந்த வீண் விளம்பரம் என்று கோலிவுட்டில் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.