Spotlightவிமர்சனங்கள்

சிக்மா – திரைப்பட விமர்சனம் 3.25/5

நடிப்பு: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம், அன்புதாசன், சிவ் பண்டிட், யோக் ஜபீ, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர்
இயக்கம்: ஜேசன் சஞ்சய்
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ் – சுபாஸ்கரன்
இசை: எஸ். தமன்
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்பு: கே.எல். பிரவீன்

தனது மறைந்த அம்மாவின் நினைவாக இருக்கும் நூலகத்தை நடத்தி வருகிறார் குரு (சந்தீப் கிஷன்). மிகப்பெரும் தொகை கடனில் மூழ்க இருக்கும் அந்த நூலகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது அவருடைய மிகப்பெரிய ஆசை.

ஒரு பக்கம் கடன் கொடுத்தவர்களின் அழுத்தம், மற்றொரு பக்கம் நூலகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என பணத்திற்காக போராடுகிறார் சந்தீப்.

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்காக அங்கு சென்று, கையில் இருந்த பணத்தை வீணடிக்கிறார். அதன்பிறகு தான் அவருக்கு தெரிய வருகிறது, சூதாட்டம் ஆடியவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று, பின் சண்டை ஏற்பட, சந்தீப்பை கொன்று விடுவதாக மிரட்டி வெளியே அனுப்பி வைத்து விடுகின்றனர்.

அதன் பிறகு சந்தீப் ஒரு திட்டம் தீட்டுகிறார். சாதாரணமாக தொடங்கும் அந்த திட்டம், போதைப்பொருள் கடத்தல் கும்பல், சட்டவிரோத கேசினோ, மிகப்பெரிய பணம் மற்றும் முக்கியமான ஒரு பென் டிரைவ் என பெரிய குற்றவுலகத்திற்குள் குருவை இழுத்துச் செல்கிறது.

அந்த பென் டிரைவில் என்ன இருக்கிறது? அதை கைப்பற்ற பல கும்பல்கள் துரத்துவது ஏன்? இந்த ஆபத்தான விளையாட்டில் இருந்து குருவும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? குருவால் தனது கடனை அடைத்து அம்மாவின் நினைவான நூலகத்தை காப்பாற்ற முடிந்ததா? என்பதே ‘சிக்மா’ படத்தின் மீதிக்கதை.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் என்பதால் ஆரம்பத்திலிருந்தே ‘சிக்மா’ மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தனது முதல் படத்திலேயே ஒரு பெரிய Crime – Heist – Action கதையை கையில் எடுத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

ஆரம்பத்தில் குருவின் குடும்ப சூழல், நூலகம், கடன் பிரச்சனை என கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குற்ற உலகத்திற்குள் கதையை அழைத்துச் செல்கிறார்.

முதல் பாதியில் பல கதாபாத்திரங்களையும் அவர்களின் தேவைகளையும் அறிமுகப்படுத்திய விதமும், பின்னால் நடக்கப்போகும் சில விஷயங்களுக்கு முன்கூட்டியே clue கொடுத்திருக்கும் விதமும் கவனம் பெறுகிறது.

குறிப்பாக heist தொடங்கிய பிறகு படம் வேகம் எடுக்கிறது. யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? யார் எந்த பக்கம் இருக்கிறார்கள்? அந்த பென் டிரைவ் யாருடைய கைக்கு செல்லப்போகிறது? என்ற கேள்விகளை வைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

இடைவேளை பகுதி படத்தின் முக்கியமான highlight.

ஆனால் இரண்டாம் பாதியில் அதிகமான கதாபாத்திரங்கள், double-cross, twists என தொடர்ந்து வருவதால் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது. சில திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவற்றுக்கான emotional connect இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். ஹீரோயின் எப்படி இப்படியொரு மோசடி கும்பலுக்குள் வந்து பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே குறி என நினைக்கிறார். அதற்கான விளக்கமும் தெளிவாக கூறப்படவில்லை..

குரு கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் படத்தை தனது தோளில் சுமந்து செல்கிறார்.

தாயின் நினைவாக இருக்கும் நூலகத்தை காப்பாற்ற போராடும் மகனாக வரும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நண்பர்களுடன் இருக்கும் கலகலப்பான காட்சிகள், காதல், கடன் பிரச்சனையால் ஏற்படும் பதற்றம் என முதல் பாதியில் சாதாரண இளைஞராக இருக்கும் சந்தீப் கிஷன், கதை crime zone-க்குள் சென்ற பிறகு action mode-க்கு மாறுகிறார்.

குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது.

RJ-வாக வரும் ஃபரியா அப்துல்லா அழகாக இருக்கிறார். சந்தீப் கிஷனுடன் வரும் ஆரம்பகட்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஆனால் படத்தின் முக்கிய crime plot தொடங்கிய பிறகு அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைகிறது. இன்னும் அழுத்தமான கதாபாத்திரமாக எழுதியிருந்தால் அவரது presence படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்.

குற்ற உலகின் முக்கியமான நபராக வரும் சம்பத் ராஜ் தனது அனுபவமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரது தோற்றமும் body language-ம் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறது.

ராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் சந்தீப் கிஷனுடன் பயணிக்கும் கதாபாத்திரங்களாக வருகின்றனர். குறிப்பாக அன்புதாசனின் சில காட்சிகள் கலகலப்பை கொடுக்கின்றன.

சிவ் பண்டிட், யோக் ஜபீ, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் crime network-ஐ விரிவுபடுத்த பயன்பட்டிருக்கின்றன.

இதில் மகாலட்சுமியின் கதாபாத்திரம் சில இடங்களில் கவனம் ஈர்க்கிறது.

முதல் படத்திலேயே safe ஆன காதல் அல்லது family subject-ஐ தேர்வு செய்யாமல், பல கதாபாத்திரங்கள் மற்றும் பல sub-plots கொண்ட heist thriller-ஐ எடுத்திருப்பதில் ஜேசன் சஞ்சயின் ambition தெரிகிறது.

படத்தை stylish-ஆக காட்ட வேண்டும் என்பதில் அவர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

கதாபாத்திரங்களுக்கான தனித்தனி அறிமுகம், underground casino, heist setup, action blocks என ஒரு பெரிய commercial crime thriller-க்கான விஷயங்கள் படத்தில் நிறைய இருக்கின்றன.

முதல் பாதியில் வைக்கப்படும் சில விஷயங்களை பின்னால் connect செய்திருப்பது இயக்குநரின் screenplay planning-ஐ காட்டுகிறது.

அதே நேரத்தில், படம் visuals மற்றும் style-க்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் கொடுத்திருக்கலாம்.

குருவுக்கு நூலகம் ஏன் அவ்வளவு முக்கியம்? அந்த கடனை அடைக்க வேண்டிய desperation எந்த அளவுக்கு இருக்கிறது? என்ற emotional portions இன்னும் ஆழமாக இருந்திருந்தால் climax-ல் நாயகனுடன் ரசிகர்களும் அதிகமாக பயணித்திருப்பார்கள்.

மேலும் சில இடங்களில் லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருக்கலாம்.

தமனின் பின்னணி இசை action மற்றும் heist காட்சிகளுக்கு தேவையான energy-யை கொடுக்கிறது.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான பலம். குறிப்பாக casino மற்றும் action portions-ல் படத்தை stylish-ஆக காட்டியிருக்கிறார்.

கே.எல். பிரவீனின் editing வேகமான காட்சிகளில் படத்திற்கு உதவுகிறது. பல கதாபாத்திரங்கள் மற்றும் பல்வேறு சம்பவங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய screenplay என்பதால் editing முக்கிய பங்கு வகிக்கிறது.

சண்டைக் காட்சிகளும் படத்தின் commercial value-ஐ உயர்த்துகின்றன. குறிப்பாக multi-level car parking பகுதியில் நடைபெறும் action sequence கவனம் பெறுகிறது.

சந்தீப் கிஷனின் energetic performance, ஜேசன் சஞ்சயின் stylish presentation, ஒளிப்பதிவு, பின்னணி இசை, editing, heist portions, action sequences மற்றும் interval block ஆகியவை படத்தின் முக்கிய பலங்கள்.

கதாபாத்திரங்களுடன் முழுமையான emotional connection உருவாகாதது, சில லாஜிக் மீறல்கள், அதிகமான கதாபாத்திரங்களால் ஏற்படும் குழப்பம், இரண்டாம் பாதியின் சில நீளமான பகுதிகள் மற்றும் வழக்கமான crime-thriller அம்சங்கள் படத்திற்கு பின்னடைவாக அமைந்திருக்கின்றன.

ஒரு நூலகத்தையும் தாயின் நினைவையும் காப்பாற்ற பணத்திற்காக போராடும் சாதாரண இளைஞன், எதிர்பாராத விதமாக மிகப்பெரிய குற்ற உலகத்திற்குள் சிக்கிக்கொள்வது என்ற கதையை commercial entertainment-ஆக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

கதையில் சில லாஜிக் குறைகளும், கதாபாத்திரங்களுக்கான emotional depth குறைவாக இருப்பதும் தெரிந்தாலும், technical making, action, cinematography மற்றும் வேகமான சில thriller moments படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.

முதல் படத்திலேயே பெரிய scale-ல் ஒரு crime thriller-ஐ கையாள முயற்சி செய்திருக்கும் ஜேசன் சஞ்சய், தனது visual sense மற்றும் making-ல் கவனம் ஈர்க்கிறார். அதே அளவுக்கு screenplay மற்றும் character writing இன்னும் வலுவாக அமைந்திருந்தால் ‘சிக்மா’ இன்னும் தாக்கமான heist thriller-ஆக மாறியிருக்கும்.

மொத்தத்தில் – ஸ்டைலிஷான மேக்கிங், ஆக்‌ஷன் மற்றும் ஹெய்ஸ்ட் தருணங்களால் கவனம் ஈர்க்கும் ‘சிக்மா’; திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருந்தால் தாக்கம் அதிகமாகியிருக்கும்.

Facebook Comments

Related Articles

Back to top button