கிருஷ்ணா நடித்து வரும் ‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். இந்த படத்தில் ‘Action King’ அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப், ‘கோட்டா’ சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை ’பேராண்மை’ , ‘பூலோகம்’, ‘மீகாமன்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
‘க்ரைம் நாவல்’ மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்பட உள்ளது.
Facebook Comments