Spotlightசினிமா

படம் முழுக்க பாடல்கள்… சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ பட எக்ஸ்க்ளூசிவ்!

னா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்று தனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்த சந்தோஷத்தில் படக்குழுவினர் உள்ளனர்.

படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர். 2019 ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை 75 நாட்கள் நூற்றிக்கும் மேற்ப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு இப்போது முழு முனைப்புடன் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள், ஆர்ப்பரிக்கும்ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய ராணுவவீரர்கள் என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது.

‘வாழ்’ திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை ஷெல்லியும், படதொகுப்பை ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவும், இசையைப்ரதீப்குமாரும், கலை இயக்கத்தை ஶ்ரீராமனும்செய்கிறார்கள்.

முன்னதாக 2018ல், இப்படத்தின் இசைக் கோர்வை சேகரிப்புக்காகவும், இசைப் பதிவிற்காகவும் படக்குழு டல்லாஸ், சின்சினாட்டி, இஸ்தான்புல் என உலகின் பல நகரங்களுக்குச் சென்றது குறிப்பிடதக்கது. வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்த பல இசை கலைஞர்களின் பங்களிப்பு இப்பட்டத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பல பாடல்கள் இருப்பதாகவும் கூடுதல் தகவல்.

‘வாழ்’ திரைப்படத்தின் நடிகர்கள் யார், படத்தின் இசைவெளியீடு எப்போது என்னும் தகவல்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close