Spotlightசினிமா

‘காந்தாரா’ பாணியில் தெய்வீக மர்மத் த்ரில்லர்! ஆதி சாய்குமாரின் ‘ஆதி ருத்ரா’ படப்பிடிப்பு ஜனவரியில்!

‘காந்தாரா’ படத்தைத் தொடர்ந்து தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகவுள்ள புதிய பான் இந்திய திரைப்படம் ‘ஆதி ருத்ரா’ (Aadi Rudra). இப்படத்தில் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G. ருத்ரப்பா தயாரிக்கிறார். இயக்குநர் நவரசன் கதை எழுதி இயக்குகிறார்.

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, தெய்வீக மர்மங்கள், ஆன்மிக நம்பிக்கைகள் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் இப்படம் உருவாகவுள்ளது.

‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button