Spotlightசினிமாதமிழ்நாடு

திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார்!!

ரு தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன். அவருக்கு வயது 61.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கூறினர்.

மேலும், மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் சரியாக இன்று காலை 10.07 மண்இக்கு அவரது உயிர் பிரிந்தது.

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயற்கை, பேராண்மை, பொதுவுடமை என சில படங்களை இயற்றியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தினை இயக்கியிருக்கிறார்.

இவரது இழப்பு தமிழ் சினிமாவில் ஈடுசெய்ய முடியா இழப்பு. பல கலைஞர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button