
இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, அனித்ரா, சாண்ட்ரியா, மொட்டை ராஜேந்திரன் , பிக் பாஸ் புக ழ் ஜுலி, ஆதித்யா டிவி புகழ் கதிர், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி).
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இந்நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியானது. அந்த போஸ்டரில் ஹீரோ அர்ஜுமன் ஒரு பெண்ணிடம் முத்தம் வாங்கும் காட்சி அது.
மேலும், அந்த போஸ்டரில் “A” Square என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் உதட்டோட்டு உதடு காட்சி இருந்தால், அதற்கு தான் ’ஏ’ சான்றிதழ் கொடுப்பார்கள். ஏ Square என்று போட்டிருப்பதை பார்த்தால் அர்ஜுமன் முத்தத்தினை பலமாக கொடுத்திருப்பார் போலும்.? அது இல்லை என்றால் அதற்கு மேல் என்ன காட்சிகள் இருக்கக்கூடும் என கேள்விகள் எழுகின்றன.
படம் வெளியான பிறகு தான் படத்தில் என்ன என்ன காட்சிகள் உள்ளன என்பதை காண இயலும். வழக்கம் போல் காத்திருப்போம்.
முத்தமா அல்லது மொத்தமா என்று..??