Spotlightசினிமா

தர்பார் படத்தின் உண்மையான வசூல் நிலவரம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’.

இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 9-ந் தேதி உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் உலகளவில், 4 நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button