
அறிமுக இயக்குனர் சதீஷ்குமார் இயக்கத்தில் ஜீ வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பேச்சிலர்”.
இளைஞர்களின் இந்த கால மனநிலை, இந்த கால காதல் என அவர்களின் மனப்போக்கை கூறி பாராட்டினை பெற்றார் இயக்குனர்.
இப்படத்தை Axess Film Factory சார்பில் டில்லி பாபு தயாரித்திருந்தார். படம் வெளியான ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், அதன் பிறகு இளைஞர்களின் படையெடுப்பு திரையரங்கிற்கு அதிகமானது.
படத்தினை அனைவரும் கொண்டாடினார்கள். இது இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய படம் எனவும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.
தொடர்ந்து மூன்றாவது வாரமாக நல்லதொரு ரிப்போர்ட்டுடன் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன் படத்தினை பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா கூறியுள்ளதாவது, “ தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கையை நேரிடையாக படம் பிடித்தது போல காட்சிப்படுத்தியுள்ளான் சதீஷ் செல்வகுமார். ” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ”Lovely boy G V பிரகாஷ் & திவ்யபாரதி இருவரும் கவிதை.
தேனீ ஈஸ்வர் & திரு. டில்லி பாபு அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.” என்றும் கூறியுள்ளார்.
இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.





