பொதுவாக இத்தகைய நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் என்றாலே பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நடத்தப்பட்டு வருகின்றன,
ஆனால் SRBS entertainment & கிக் பாக்சர் இணைந்து புதிதாக நட்சத்திர கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டிலேயே வெவ்வேறு இடங்களில் நடத்த திட்டமிட்ட இவர்கள் முதல் முறையாக பண்ருட்டியில் மிக பிரமாண்டமான முறையில் நடத்தி”கிராமங்களை நோக்கிய கலைநிகழ்ச்சி” என்ற முயற்சியை நிறைவேற்றியும் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிகரம் சந்திரசேகர், கிக் பாக்சர் நிறுவனத்தின் MD ராஜேந்திரன், செல்வம், இயக்குனர் பேரரசு, கவிஞர் சினேகன், பாடகர் பிரசன்னா, நடிகர் அருள்மணி, SRB.சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்..
தமிழ்நாட்டில் கிராமங்களை நோக்கி நட்சத்திர கலை விழா நடத்தி முதன் முதலாக அதன் வெற்றி விழாவை கொண்டாடிய பெருமை SRBS மாடலிங் STUDIO – வையே சேரும்.
இந்நிகழ்ச்சியை பற்றி SRBS Entertainment நிர்வாகி சுரேஷ் கூறியபோது “எங்களது நோக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இந்த கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் , நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியில் வரும் லாபத்திலிருந்து பத்து சதவீதத்தை தமிழகத்தில் நலிந்து கொண்டிருக்கும் ஏழை விவசாயத்தை வளர்த்திட ஒதுக்கி உள்ளோம். இதை நடத்துவதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் கலை மீது உள்ள ஆர்வம் மட்டுமே…
கடந்த காலத்தில் எப்படி நாடக குழுவினர்கள் ஊர் ஊரக சென்று நாடகம் போட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி கலையை வளர்த்தார்களோ.. அதோ போல் இப்போது அதை நாங்கள் கலைநிகழ்ச்சி மூலம் செய்கின்றோம்” என்று கூறியுள்ளார்…