பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் ‘வர்மா’. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் நாயகியாக மேகா என்னும் வங்காள நடிகை நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் வர்மாவில் ரைசாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இதுபற்றி ரைசா கூறும்போது ‘படத்தில் என்னுடைய வேடம் என்ன என்று இப்போது கூற முடியாது. பாலா சார் என்னை அழைத்தபோது எனது கால்கள் தரையிலேயே இல்லை. அவர் என் வேடத்தை விளக்கியபோது அது சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. உடனே சம்மதித்து விட்டேன்.
பாலா படத்தில் நடிப்பது ஒரு கல்லூரி போல. நிறைய கற்றுக்கொள்ளலாம். துருவ் கேமரா முன்பு நடிப்பதை பார்த்தால் முதல் படம் போலவே தெரியவில்லை. தொழில்முறை நடிகரை போல தன்னை மாற்றிக்கொள்கிறார்.
அவரது ரத்தத்திலேயே நடிப்பு இருக்கிறது. அவரது தந்தை விக்ரம் தந்தது அது’ என்று கூறி இருக்கிறார். ரைசா நடிப்பது படத்தில் ஒரு நடிகையாகவே வந்த ஜியா சர்மாவின் வேடம் என்று தகவல் வருகிறது.