தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என கூறிய ரஜினிகாந்த் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ரஜினியின் குரல் பாஜக அல்லது அதிமுகவினுடையதா என்பது சந்தேகமாக உள்ளது என்று தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசும்போது சமூக விரோதிகள் தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும்.’ என்றும் கூறியுள்ளார்.
Facebook Comments