
இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த படம் ‘அருவி’.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்திருந்தனர்.
இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் அடுத்ததாக 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். அருவி படத்திற்கு பிறகு அருண்பிரபு இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் அருண்பிரபு, தயாரிப்பாளர் ஆர்டி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த படம் 24ஏஎம் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் 5வது படமாக உருவாகவுள்ள இந்த படமும் அருவி படத்தை போன்று கதாநாயகனே இல்லாமல் உருவாக உள்ளதாம்.
இந்த படத்தில் நாயகி உள்ளார் ஆனால் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்டி ராஜா மற்றும் இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் முதன் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு சிவகார்த்திகேயன், அனிருத் என பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.