Spotlightசினிமா

”என்னை வாழ வைக்கும் தெய்வங்களான…” நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து தெரிவித்த நல் உள்ளங்களுக்கும் வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் வெள்ளை நிறத்தவர்கள் ஆட்சி கொண்டிருந்த அக்காலகட்டத்தில் கருப்பு நிறத்தில் தனது வெளிச்சத்தை தமிழ் சினிமாவில் பரப்பினார் ரஜினிகாந்த்.

தனது சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலடியெடுத்து வைத்து சுமார் 45 வருடங்கள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பெரும்பாலானோர் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கூறி வந்தனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻

#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button