Spotlightவிமர்சனங்கள்

லால் சிங் சத்தா – விமர்சனம் 3.5/5

அதுல் குல்கர்னி எழுதிய திரைக்கதையில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், நாக சைதன்யா, கரீனா கபூர் நடித்துள்ள திரைப்படம் தான் லால் சிங் சத்தா. கடந்த வியாழன் அன்று தமிழ் , தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது இத்திரைப்படம். உலகளவில் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் அமீர்கான், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

பள்ளி பருவத்தில் மனவளர்ச்சியில் மற்ற மாணவர்களை் போல் இல்லாமல் தனித்து காணப்படுகிறார் அமீர்கான். நம்ம பாணியில் சொல்லனும்னா சின்னத்தம்பி படத்துல வர்ர பிரபு மாதிரி குணம் கொண்டவராக இருக்கிறார்.

காலிலும் சற்று ஊனம் இருக்கிறது. நண்பர்களின் கிண்டல், பள்ளி தோழி கரீனாவின் தூண்டுதல் என ஓட்டத்தில் சாதனை படைக்க ஆரம்பிக்கிறார் அமீர் கான்.

இதனால் இவருக்கு மிலிட்டரியில் பணி கிடைக்கிறது. கரீனா கபூர் உடனான நட்பு நாள்டைவில் காதலாக மாறுகிறது அமீர்கானுக்கு.

மாடலிங், நடிப்பு என சாதிக்க நினைக்கும் கரீனாவிற்கு அமீர்கானின் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

போரில் வீரர்களை காப்பாற்றி விருது வாங்கும் அமீர்கான், தனது மிலிட்டரி வேலையை துறந்து கிராமத்திற்கு வந்து தொழிற்சாலை ஆரம்பிக்கிறார்.

ஒருகட்டத்தில் அமீர்கான் தனது தாயாரை இழந்துவிட, தனிமரமாக நிற்கும் அமீர்கானுக்கு கரீனா கபூர் தனது காதலை கொடுத்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து பயணித்திருக்கிறார் அமீர்கான். நட்பு, காதல், விளையாட்டுத்தனம் என ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பை ரசிக்க வைத்திருக்கிறார் அமீர்கான். சிறுசிறு குறும்புத்தனத்திலும் அனைவரின் மனதில் எளிதாக ஒட்டிக் கொள்ளும் நடிப்பை தந்திருக்கிறார்.. கரீனா கபூரின் காதல் காட்சிகள் தேன் சொட்டும் காவியமாக தெரிகிறது. அவரும் தனது அனுபவ நடிப்பை கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நாக சைதன்யாவின் நடிப்பை இதில் பாராட்டலாம். கதாபாத்திரத்தோடு ஒன்றிய ஒரு நடிப்பை கொடுத்து நம்மை கவர்ந்திருக்கிறார்.

நடிப்பை என்னதான் நாம் புகழ்ந்து பாராட்டினாலும், திரைக்கதையின் ஓட்டம் சற்று மெதுவாக நகர்வதால் படத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏனோ ஈர்க்க மறுக்கிறது.

இசையமைப்பாளர் ப்ரீதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், தனுஜ் டிக்குவின் பின்னணி இசையும் கதையோரு மெதுவாக நகர்கிறது.

படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு. இன்னும் சற்று கூடுதல் விறுவிறுப்பும் சற்று ஷார்ப்பும் இருந்திருந்தால் படம் வேகம் கொண்டு நம்மை மேலும் ரசிக்க வைத்திருக்கக்கூடும்.

லால் சிங் சத்தா – சத்தமின்றி கொடுக்கும் காதல் உணர்வு

Facebook Comments

Related Articles

Back to top button