Spotlightசினிமா

சென்னை மக்களின் நிஜ வாழ்வியலை கூறும் ‘ஷார்ப்’!

சென்னை மக்களோட வாழ்வியல், அந்த வாழ்வியலுக்குள்ள இருக்கிற நுட்பமான அரசியல், அந்த நுட்பமான அரசியலுக்குள்ள இருக்கிற ரவுடியிசம் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களை கூற வருகிறது ‘ஷார்ப்’.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜே.தமிழ்செல்வன் இயக்கியிருக்கிறார். நாயகனாக அதின் நடிக்கிறார். இவருக்கு இது இரண்டாவது படம். சாய் தினா மற்றும் யோகி ராம் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் என்.எஸ்.கணேஷ், மணிமாறன், பிராணா, சதிஷ், கல்லா பிரதீப் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு டைசன் ராஜ் இசையமைத்திருக்கிறார். இதற்கு முன் இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தம் மாறாமல் காண்பிக்கும் நோக்கத்தோடு இயக்கி வருகிறார் ஜே.தமிழ்செல்வன். ரவுடிசத்தை மையப்படுத்தி கூறும் படமென்பதால் சண்டை காட்சிகள் நிறைந்து யதார்த்தமாக எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் – கதை: N.S.கணேஷ் இயக்கம்: ஜே.தமிழ்செல்வன்
நடிகர்: அதின்
ஒளிப்பதிவாளர் : ராஜ்குமார்
இசை: டைசன் ராஜ்
படத்தொகுப்பு: கம்பம் மூர்த்தி
கலை இயக்குனர்: விஜய் பிரகாஸ்
சண்டைப்பயிற்சி: டேஞ்சர் மணி
விளம்பர வடிவமைப்பு: மணிகண்டன்
தயாரிப்பு: N.S.கணேஷ்
NSG சந்தோஷ் மூவிஸ் வழங்கும்
உதவி இயக்குனர்கள்: சிவா, கார்த்தி, அருண்பாண்டியன், ராஜேஸ் வீரமணி
பாடலாசிரியர்: கானா புன்னியர்
நடன ஆசிரியர்: ஸ்ரீ அர்ச்சனா.
மக்கள் தொடர்பு : பிரியா

Facebook Comments

Related Articles

Back to top button