நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி தரக்குறைவாக எழுதப்பட்ட பதிவை தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். இதற்கு தமிழகளவில் பல்வேறு தரப்பு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதை தொடர்ந்து எஸ்.வி. சேகரை கைது செய்யவேண்டும் என பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள், ஊடகங்கள் தமிழக அளவில் பல போராட்டங்களை நடத்தினர்.
இவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் அவர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார், ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது எஸ்.வி. சேகர் வரும் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் அஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை எஸ்.வி. சேகர் கையெழுத்திட்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments