
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் “வாத்தி” படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தினைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இப்படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறதாம். 1930 காலகட்டத்தில் நடக்கும் படமாக உருவாக்கப்படவிருக்கிறதாம்.
ராக்கி படத்தை இயக்கியவர் தான் இந்த அருண் மாதேஸ்வரன் .
இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். அப்படி வெளியிட்டால், தனுஷ் நடிக்கும் முதல் பான் இந்தியா படமாக இது அமையும்.
படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.