
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜசேகர்.G
நடிகர்கள்: த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ் ,இனியா, ராதா, ரவி மரியா , தம்பி ராமைய்யா , சத்யன் , ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் , பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு.
ஒளிப்பதிவு – C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech
இசை – அருணகிரி
எடிட்டிங் – K. குமார்
தயாரிப்பு நிறுவனம் – Arun Visualz தயாரிப்பாளர் – கோவை ரமேஷ்
கதைப்படி,
நாயகன் த்ரிகுண் இப்படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீ ஜீத்தா கோஷ் அவர்கள் அனிதா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
கல்லூரி பயின்று வரும் சிவா மற்ற அனிதா இருவரும் காதலிக்கிறார்கள். காதலித்து ஒரு வருடத்திற்கு பிறகு அனிதா தனது தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இதுவரை இருவரும் ஒன்றாக உறவு வைத்துக் கொண்டதில்லை என்று அனிதா கூற, காதலனுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் காதலன் கழட்டி விடுவான் என்று அனிதாவை குழப்பி விடுகிறார்கள் சக தோழிகள்.
இதனை தொடர்ந்து சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று உடலுறவில் ஈடுபடுகிறார் அனிதா. அதன் பிறகு சிவா தனியாக அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார். காரணம் என்ன என்று அனிதா கேட்க, தான் கல்லூரியில் படிக்கும் போது டியூஷன் டீச்சர் ஆக இருந்த இனியாவோடு உறவு வைத்ததாக கூறுகிறார்.

இதனால் கோபம் அடைந்த் அனிதா, சிவாவுடன் பிரேக் அப் செய்கிறார். காதல் தோல்வியில் சுற்றுகிறார் சிவா. தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக உறவு வைத்துக் கொள்கின்றனர். முன்பு நடந்த சம்பவம் போல் இந்த முறையும் சிவா அழுக, அனிதாவும் காரணம் கேட்க, எதைச்சையாக ராதாவுடன் உறவு வைத்திருந்ததை கூறிவிடுகிறார் சிவா.
இதனால் மீண்டும் பிரேக்கப் ஆக ஒரு கட்டத்திற்கு மேல் தான் திருந்திவிட்டதாக கூறி அனிதாவை சிவா திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் செய்து கொண்டு அனிதா தனது வீட்டிற்கு மாலையும் கழுத்துமாக சிவாவை அழைத்துச் செல்கிறார்.
அந்த வீட்டிற்கு சென்ற பிறகுதான் சிவாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன என்பதே படத்தின் மீதி கதை.
முழுக்க முழுக்க ஆபாச வார்த்தைகளாலும் இரட்டை அர்த்த வசனத்தாலும் படம் நிரம்பி வழிகிறது. அது மட்டுமல்லாமல் காட்சிகளிலும் ஆபாச காட்சிகளாகவே படம் முழுக்க வந்து படம் பார்ப்பவர்களை குஷிபடுத்தியிருக்கிறது.

படம் முழுவதும் ஆபாச காட்சிகள் மட்டுமே நிரம்பி இருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க இயலும். மேலும், இது ஏ தரச் சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் குடும்பத்தோடு நிச்சயமாக பார்க்க இயலாது.
படம் பார்க்கும் அனைவரையும் நிச்சயம் மகிழ்விற்கும் அளவிற்கு அனைத்து அம்சங்களும் படத்தில் நிரம்பி வழிகின்றன. இனியா தாராள பிரபுவாக தனது கவர்ச்சிகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ராதாவும் ஆங்காங்கே தனது பங்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்.
கதையின் நாயகியான ஸ்ரீ ஜீத்தா கோஷ், இவரும் கவர்ச்சியில் எந்த குறையும் வைக்கவில்லை. படம் பார்க்க வரும் இளைஞர்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதை அனைத்தையும் இவர் கொடுத்திருக்கிறார். மேலும் படத்தில் நடித்த ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என அனைவருமே தங்களது பங்கிற்கு ஆபாச வார்த்தைகளையு இரட்டை அர்த்த வசனங்களையும் நிரப்பி தனது நடிப்பினை அளவாக கொடுத்திருக்கின்றனர்.
அருணகிரி அவர்களின் பின்னணி இசை கதையோடு பயணப்பட வைக்கிறது. விஜயஸ்ரீ அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளை மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது. அதுவும் இரண்டாம் பாதியில் மலைப் பிரதேசத்தில் அழகான வெளிச்சத்தோடு அழகாக காட்சியினை படம் பிடித்திருக்கிறார்.
எந்த லாஜிக் இல்லாமல் இரண்டு மணி நேரம் அனைத்தையும் மறந்து முழுக்க முழுக்க ஜாலியாக ரசித்து சிரிக்க நினைக்கும் அத்தனை பேரும் இந்த ஸ்வீட்டி நாட்டி கிரேசி படத்திற்கு நிச்சயம் சென்று வரலாம். படம் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றாது..
நம்பி போங்க… சந்தோஷமா இருங்க





