
சீதா இவரின் மகன் ஹீரோ விவேக்ராஜ். இவர்களின் கிராமத்துக்கு வரும் என்எஸ்எஸ் முகாமுக்காக சென்னை பெண் மோனிகா அண்ட் மாணவிகள் வருகின்றனர். விவேக்ராஜ்ம் மோனிகாவும் காதல் கொள்கின்றனர்.
பின்னர் என்எஸ்எஸ் கேம்ப் முடிந்து சென்னை செல்கிறார் நாயகி.
அப்போது இருவரின் தொடர்பும் சந்தர்ப்ப சூழ்நிலையால் துண்டிக்கப்படுகிறது.
அதன்பின்னர் வேலை கிடைத்தும் நாயகியை தேடியும் சென்னை செல்கிறார் நாயகன். ஆனாலும் அவரை சந்திக்க முடியவில்லை.
கிட்டதட்ட தொட்டு விடும் தூரத்தில் இருந்தபோதிலும் இவர்களை சந்திக்க விடாமல் ஒருவர் பிரிக்க நினைக்கிறார். அவர் யார்? காதலர்கள் சேர்ந்தார்களா? காதலியை கண்டு பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என திறமை காட்ட நினைத்துள்ளார் நாயகன் விவேக் ராஜ். கொஞ்சம் ஸ்கோர் செய்துள்ளார். முகபாவனைகளில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.
நாயகி மோனிகா ஹோம்லி பிகர். கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். சுடிதாரிலும் சேலையில் நம்மை கவர்கிறார். பாடல் காட்சியில் சேலையில் வந்தாலும் நம்மை இதமாக சூடேற்றுகிறார்.
சீதா, அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் ஆகியோர் இருந்தும் காமெடியில்லை. படத்தை நீள செய்துள்ளது.
காமெடியன்கள் இருந்தும் காமெடி எடுபடாதது படத்திற்கு பின்னடைவு.
காதலர்கள் சேர்வார்களா? என்று க்ளைமாக்ஸ் சமயத்தில் நம்மை தவிக்க விட்டுள்ளார் இயக்குனர்.
வி.பி.நாகேஸ்வரன். கிளைமாக்ஸ் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று. அதில் சொல்லப்பட்ட கருத்து நன்று.
சாலை விதிகள் மதிக்காமல் சென்றதால் ஏற்படும் விபத்து, அதன்பின்னர் உடல் உறுப்பு தானம் உள்ளிட்டவைகளை சொன்ன விதம் அருமை.
நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ராம் குமாரின் ஒளிப்பதிவில் டூயட் பாடல் செம ஹாட். கண்களுக்கு விருந்து.
மொத்தத்தில் “தொட்டு விடும் தூரம்” காதலும் தானமும்
Thottu Vidum Thooram review rating





