Spotlightசினிமா

சிங்கப்பூரில் தேசிய விருது பெற்ற தென்னாட்டு தமிழன்!

சிங்கப்பூரில் ‘கவசம்’ என்னும் நாடகத்தை மேடையேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது ‘அதிபதி’ நாடகக்குழு. சில மாதங்களுக்கு முன் சுமார் 600 பக்க வசனங்களோடு 60 நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டு சுமார் 28 மணி நேரம் நாடகம் நடைபெற்றது.

இந்த நாடகத்தை திரு. புகழேந்தி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கினார். கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம் என்றும் ‘சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸில்’ சிங்கப்பூரில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் நாடகம் என்றும் சாதனையை படைத்தது இந்த ’கவசம்.

அதிலும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார் கற்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் கடற்கரையாண்டி(29) என்பவரது நடிப்புத்திறமையை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினர்.

இந்நிலையில், சிங்கப்பூரின் நேஷ்னல் விருது ஒன்று இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கே கிடைத்த பெருமையாக தான் கருதுவதாக சண்முகநாதன் தெரிவித்தார்.

இதுபோல், இன்னும் பல நாடுகளில் பல மேடைகளில் நாடகங்களின் பெருமையையும் நாடகக் கலைஞர்களின் பெருமையையும் போற்றுவதே எனது நீண்ட நாள் ஆசை எனவும் அவர் தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button