Spotlightசினிமாதமிழ்நாடு

அஜித்தை பாஜக-விற்கு நாங்கள் அழைக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், நான்‌ சினிமாவில்‌ தொழில்‌ முறையாக வந்தவன்‌. நான்‌ அரசியல் ‌செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் முன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது,

”சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார்.

நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

அஜித்தை பாஜகவிற்கு அழைத்ததாக சிலர் சொல்கிறார்கள் , அப்படி நாங்கள் அவரை அழைக்கவில்லை.

அஜித் அறிக்கை பதிலாக தான் பார்க்கிறோமோ தவிர பாஜகவிற்கு பதிலடியாக இல்லை மாணவர்களை தவிர யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button