
ஹச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “வலிமை”.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
படத்தினை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எஸ் எஸ் இராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் “RRR” படம் பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
பல மொழிகளில் வெளியாகும் “RRR” திரைப்படத்திற்கு பல கோடி அளவில் பிஸினஸ் நடந்த வண்ணம் உள்ளது..
இதனால், வலிமை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பாதிக்கும்படியான சூழல் ஏற்பட்டுள்ளது..
இதனால் வலிமை படக்குழு சற்று அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்
Facebook Comments





